தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதன்படி புதன்கிழமையான இன்று (17.12.2025) மாவட்ட காவல் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த 38 மனுதாரர்கள் தங்கள் குறைகளை தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் திரு. ஆறுமுகம் மற்றும் திரு. தீபு ஆகியோரிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.

பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts