
தூத்துக்குடி தமிழகத்தில் 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தோ்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு அதிமுக வினா் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் விருப்பமனுக்கள் வழங்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தாா். அதன்படி கடந்த 15ம் தேதி முதல் விருப்பமனுக்கள் வழங்கி வருகின்றனா்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் அதிமுக மாநில வா்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் எம்.ஜி.ஆர் மாளிகையில் உள்ள நிர்வாகிகளிடம் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பமனு வழங்கியது மட்டுமின்றி அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எதிா்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று இரண்டு விருப்பமனுவை வழங்கினாா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.











