
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதிக்கு தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் இருந்து சாலை மறுமார்க்கமாக வருவதற்கு பிரத்தியேக சாலையாக அமைந்திருப்பது உடுமலை மூணார் சாலையாகும்.
இங்கு காட்டு யானைகள் ஆங்காங்கே சுற்றித் திரிவது சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு இனிமையை அளித்தாலும் சில நேரங்களில் வாகனங்கள் தாக்கப்படுவதும் பொதுமக்கள் இதனால் தங்களுடைய போக்குவரத்தில் இடையூர் ஏற்பட்டு பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

சில நேரங்களில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளே காட்டு யானைகளை அதிக ஒலி எழுப்பியும், வாகனங்களின் வேகத்தை கூட்டியும் கோபப்படுத்துவது ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சில நாட்களுக்கு முன்பு உடுமலையிலிருந்து மூணார் செல்லும் வழியில் அவசர சிகிச்சை ஊறுதி ஆம்புலன்ஸ் காட்டு யானையினால் தாக்கப்பட்டன. தற்பொழுது காட்டு யானைகளின் தாக்குதல் அதிகரித்துக் கொண்டே வருவதால் வனத்துறை அதிகாரிகள் மற்றும் கேரளா அரசு இதற்கான சரியான நடவடிக்கைகளை ஏற்க எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணி சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இருப்பினும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடுமலை மூணார் சாலையை கடக்கும் பொழுது பாதுகாப்பாகவும் ஆபத்துக்களை உணர்ந்து காட்டு மிருகங்களை துன்புறுத்தாத வகையில் கடந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணாறு.











