
கடந்த 2015-ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது ONGC நிறுவனத்தின் குழாய்களை சேதப்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியனுக்கு வழங்கப்பட்ட தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் திருச்சி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். காவிரி டெல்டா பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் எரிவாயு குழாய்கள் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தினர் இதில் 2015-ல் நடந்த ஒரு போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக பி.ஆர். பாண்டியன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கை விசாரித்த திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் அவருக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதித்து அண்மையில் தீர்ப்பளித்தது.
மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பி.ஆர். பாண்டியன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த
பி.ஆர். பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார் மேலும்
அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி ஆணையிட்டார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டது அதன் பின்னர் நடைமுறைகள் முடிக்கப்பட்டு பி.ஆர். பாண்டியன் நேற்று மாலை சிறையிலிருந்து விடுதலையானார். அவரை விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
சிறை வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விவசாயிகள் நலனுக்காகத் தொடர்ந்து அறவழியில் போராடுவோம் என்று தெரிவித்தார்.
உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.











