பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் நினைவு தினம் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் மரியாதை!!

கயத்தாரில், அரசியலமைப்பை இயற்றிய டாக்டர். அம்பேத்கரின் 70வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கயத்தாரில், டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினமான நேற்று இந்திய நாட்டிற்காக அவர் ஆற்றிய உழைப்பையும், தியாகத்தையும், போற்றும் வகையில், கயத்தார் தெற்கு சுப்பிரமணியபுரத்தில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த அவரது திருவுருவப்படத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்னர் பிரியா குருராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

1891ம் ஆண்டு ஏப்ரல் 14ல் பிறந்த அம்பேத்கர் சட்ட மேதை, பொருளாதார நிபுணர், அரசியல் தலைவர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகங்களைக் கொண்டிருந்தார். இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழு தலைவராக விளங்கியவர். புத்த மதத்தைத் தழுவினார். 1956ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி டெல்லியில் உள்ள தனது வீட்டில் அம்பேத்கர் மறைந்தார்.

ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒலித்து, அவர்தம் உரிமைக்காகவும், விடுதலைக்காகவும் வாள்நாளெல்லாம் பாடுபட்ட அறிவுச்சுடர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில்,
அவர் காட்டிய வழியில் சமத்துவமும், சமூகநீதியும் மேலோங்கி நிற்கும் இந்தியாவை பாதுகாக்க உறுதியேற்போம்! என்றார்.

இந்நிகழ்ச்சியில் கயத்தாறு ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் சூர்யா தலைமை வகித்தார். கயத்தாறு பகுதி அம்பேத்கர் இளைஞர் அணி தலைவர் தமிழ்ச்செல்வன், செயலாளர் கதிரவன் பொருளாளர் நாராயணன், கணேசன், ராஜாபுதுகுடியை சேர்ந்த பால்ராஜ், சதீஷ்குமார் மற்றும் அம்பேத்கர் இளைஞர் அணியைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு அவரது புகழை போற்றி சிறப்பு செய்தனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அம்பேத்கர் இளைஞர் அணி நிர்வாகிகள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ்க்கு சிறப்பான வரவேற்பு அளித்து பொன்னாடை அணிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

– ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts