
கோவை புறநகர் தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு ஒன்றியம் நெகமம் பேரூராட்சிக்கு உட்பட்ட நாகர் மைதானம் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதிய கழிப்பிடம் கட்ட பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. ஜெயராமன் அவர்கள் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 4.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதற்கான பூமி பூஜை விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனைத் தொடர்ந்து அதிமுகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் நோக்கிலும் பிரம்மாண்ட திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. கோவை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. விஜயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரச்சாரத்தில் கழக நிர்வாகிகள் வீதி வீதியாகச் சென்று
அஇஅதிமுக ஆட்சியின் சாதனைகள் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் தொகுதியில் மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்த துண்டுப் பிரசுரங்களை (நோட்டீஸ்) பொதுமக்களிடம் விநியோகம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த சார்பு அணிகளைச் சார்ந்த கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் நெகமம் பேரூராட்சி அஇஅதிமுக கழகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்தப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவும் அம்மா பேரவையில் இணைந்து களப்பணியாற்றவும் நல்வாய்ப்பளித்த கோவை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. விஜயகுமார் அவர்களுக்கு கழக உடன்பிறப்புகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.












