போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 7 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 13,500/- அபராதம்!!

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு 7 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 13,500/- அபராதம் விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு – இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 29 போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு 10 மற்றும் 11 வயது சிறுமிகள் இருவரை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சகாயம் மகன் கெவின் (38/25) என்பவரை தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திருமதி. பிரீத்தா அவர்கள் இன்று (17.12.2025) குற்றவாளி கெவின் (38) என்பவருக்கு 7 வருடங்கள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 13,500/- அபராதம் விதித்தும் மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து தலா ரூபாய் 2 லட்சம் வீதம் மொத்தம் 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. சாந்தகுமாரி மற்றும் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுதர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் திருமதி. ஜானகி அவர்களையும், விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் திருமதி. ரபிலாகுமாரி ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்.

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 29 போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts