
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது!!

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
(17-12-2025) புதன்கிழமை தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் ஆணையாளர் பிரியங்கா முன்னிலையில் நடைபெற்றது.
இந்த முகாமில் பொதுமக்களிடமிருந்து சொத்து வரி, குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்குதல், பெயர் மாற்றங்கள், பிறப்பு–இறப்பு சான்றிதழ் திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டன. மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த இந்த முகாமில் தீர்வு காணப்பட்ட மனுக்களுக்கு அதற்கான சான்றிதழ்களை உரியவர்களுக்கு மேயர் வழங்கினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.











