மாணவர்கள் தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை!!

தமிழ்நாட்டில் தெரு நாய் கடித்து பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது . மேலும் கரோனா தொற்றுக்கு பின்னர், தமிழ்நாட்டில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில், தெரு நாய்கள் கடித்தால் உடனடியாக போடுவதற்கு தேவையான தடுப்பூசியும் அனைத்து மருத்துவமனைகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும் முறையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அனைத்து தலைமையாசிரியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், தெரு நாய் அச்சுறுத்தல் சார்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை குறிப்பிடப்பட்டுள்ளது.

* அதில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு முறையான தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் அறிவுறுத்த வேண்டும்.
* பள்ளியை சுற்றியுள்ள இடங்களில் தெரு நாய்கள் இருப்பதை கண்டறிந்தால் உடனடியாக உள்ளாட்சி அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
* ரேபிஸ் நோய் தொற்று குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
* பள்ளியின் அறிவிப்பு பலகைகளில் தெரு நாய் அச்சுறுத்தல் சார்ந்த விழிப்புணர்வு பதாகைகள் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.
* தெரு நாய்க்கடிக்கு ஒரு மாணவர் உட்பட்டிருப்பின், அதை எவ்வித தயக்ககமுமின்றி ஆசிரியரிடமோ, பெற்றோரிடமோ தெரிவிக்க உரிய அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts