முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு!!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்கள் பிடித்து அரசு பள்ளி மாணவர்கள் சாதனை!!முன்னாள் மாவட்ட கவுன்சிலர் G.பிரியா Dr.S.குருராஜ் Phd., பாராட்டு!!

கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ – மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி லாயல்மில் காலணி அரசு உயர்நிலைப்பள்ளியில், *முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் கருணாநிதி* அவர்களின் 102 -வது பிறந்தநாளை முன்னிட்டு (2024 – 2025) கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு டாக்டர்.கலைஞர் அவர்களின் நினைவு கேடயம் மற்றும் பரிசு தொகையினை *முன்னாள் மாவட்ட கவுன்சிலர் G.பிரியா Dr.S.குருராஜ் Phd.,* பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்வியோடு சேர்த்து, உடற்கல்விக்கும் முக்கியத்துவம் அளித்து உடற்கல்வி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. உடல்நிலை மற்றும் மனநிலையை சரியாக வைத்திருந்தால் மட்டுமே கல்வியில் முழு கவனம் செலுத்தி சரிவர கல்வி பயில முடியும். எனவே உடல்நிலையை பேணிகாப்பதில் யோகா மற்றும் உடற் பயிற்சிகள் சிறந்த பங்களிக்கிறது.

எனவே மாணவ, மாணவியர்கள் கல்வி மட்டுமின்றி விளையாட்டு போட்டிகளிலும் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் தனித்திறமையை வளர்த்துக்கொண்டு உள்ளத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

மேலும், பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியை செல்வி தலைமை வகித்தார்.

திமுக சார்பில் கோவில்பட்டி மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் பீக்கிலிபட்டி. முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கணேசன், ஒன்றிய தொண்டரணி துணை அமைப்பாளர் அன்னராஜ், லாயல்மில் காலணி கிளை கழக செயலாளர் குருசாமி ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.

இதில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
*
கோவில்பட்டி செய்தியாளர்

– ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts