வட்டாட்சியர் அலுவலக மைதானத்தில் வாகனங்கள் ஆக்கிரமிப்பு – சாலைகளில் விளையாடும் மாணவர்கள் விபத்து அபாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசுக்குச் சொந்தமான காலி இடத்தில் பல ஆண்டுகளாக அப்பகுதி இளைஞர்களும், பள்ளி மாணவர்களும் விளையாடி வந்தனர். தற்போது அந்த இடம் வாகன நிறுத்தமாக மாற்றப்பட்டுள்ளதால்விளையாடுவதற்கு இடமின்றி மாணவர்கள் சாலைகளில் விளையாடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விளையாட்டு மைதானம் ஆக்கிரமிப்பு:

வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தை ஒட்டியுள்ள இந்த அரசு நிலம் அப்பகுதி சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான விளையாட்டுத் திடலாக இருந்து வந்தது ஆனால் சமீபகாலமாக அந்த இடத்தில் பல்வேறு வாகனங்கள் அடுக்கடுக்காக நிறுத்தி வைக்கப்படுகின்றன இதனால் மைதானம் முழுவதும் வாகனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டு மாணவர்கள் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.

விளையாடுவதற்கு முறையான மைதானம் இல்லாத காரணத்தால் வேறு வழியின்றி மாணவர்கள் போக்குவரத்து நிறைந்த சாலைகளிலேயே விளையாடி வருகின்றனர் இதனால் அவ்வப்போது சிறிய அளவிலான விபத்துகள் ஏற்படுவதோடு பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பே இதற்குத் தீர்வு காண வேண்டும் என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள்
அரசு நிலத்தில் அனாவசியமாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், பல ஆண்டுகளாக மாணவர்கள் பயன்படுத்தி வந்த இந்த இடத்தை மீண்டும் அவர்களது விளையாட்டுத் தேவைக்காகவே ஒதுக்கித் தர வேண்டும்,
சாலைகளில் விளையாடுவதைத் தடுத்து அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை அதிகாரிகள் உருவாக்கித் தர வேண்டும்,
மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வால்பாறை மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

– P.பரமசிவம் வால்பாறை .

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts