கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அன்னை சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது!!

கோவை: அன்னை சோனியா காந்தி 79வது பிறந்த தினத்தை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் பொள்ளாச்சி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக பொள்ளாச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகில் மாவட்டத் தலைவர் எம்.பி. சக்திவேல் அவர்கள் தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மாவட்டத் துணைத் தலைவர் ஆர். கோபாலகிருஷ்ணன் வரவேற்றார். .நகரத் தலைவர் ஏ. செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.அன்னை சோனியா காந்தி பிறந்த நாளை ஒட்டி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அதைத்தொடர்ந்து பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில் உள்ள லூர்து மாதா சர்ச்சில் அன்னை சோனியா காந்தி அவர்களுக்கு சிறப்பு ஆராதனை செய்யப்பட்டது. இவ்விழாவில் மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் பி.வி ரவி, மாவட்டத் துணைத் தலைவர்கள் சி.மோகன்ராஜ், கே.ஆர்.என்.தேவகுமார்,மாசிலாமணி,மாவட்ட பொருளாளர் ஸ்ரீதர்,கராத்தே.எஸ்.பஞ்சலிங்கம், மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவி மகாலட்சுமி.மாவட்ட நிர்வாகிகள் குமரன் நகர் காளிமுத்து,

பன்னீர்செல்வம்,வட்டாரத் தலைவர்கள் தமிழ்ச்செல்வன்,பழனிச்சாமி, ஐ.என்.டி.யூ.சி.நிர்வாகிகள் வீராசாமி,கிருஷ்ணமூர்த்தி,வெண்ணிலா ரவிக்குமார்,கோபால் காந்தி, ராம்ராஜ்,,சார்லஸ்,பிரபு ராம்,முபாரக்,மோகன், இளைஞர்கள் தலைவர்கள் சேதுபதி,முகமது சர்புதீன்,சுரேஷ். அய்யாசாமி, இரும்பு நட்ராஜ்,மணிகண்டன்,ஆறுமுகம்,ஆறுக்குட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-MMH.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts