நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி!!

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா, 4 விக்கெட் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 300 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ராணா, சிராஜ் ம, வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் தலா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.தொடர்ந்து 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி இந்திய அணி 49 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணிக்காக விராட் கோலி 93 ரன்கள்  அடித்து ஆட்டம் இழந்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-அருண்குமார் கிணத்துக்கடவு

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts