​வால்பாறையில் நீராதாரம் இருந்தும் குடிநீர் தட்டுப்பாடு! – கொதிக்கும் பொதுமக்கள் வால்பாறை பரமசிவம் காட்டம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை பகுதியில் ஆண்டு முழுவதும் போதிய மழைப்பொழிவு இருந்தும் நகராட்சிப் பகுதியில் வசிக்கும் சாமானிய மக்களுக்குத் தடையின்றி குடிநீர் கிடைக்காதது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறை நகராட்சியில் குடிநீர் பராமரிப்புப் பணிகளுக்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இருப்பினும்
அடித்தட்டு மற்றும் சாமானிய மக்களின் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கியபாடில்லை மக்கள் முறையாக வரி செலுத்தியும் குடிநீருக்காக அலைக்கழிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

அரசியல்வாதிகள் தலையிட்டால் டெண்டர் விவகாரங்களில் சிக்கல் வரும் என்பதால் அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்படுகின்றனர் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி வால்பாறை பரமசிவம் கூறுகையில்
​வால்பாறையில் அரசு அதிகாரிகள் பெயரளவிலேயே பணிகளை மேற்கொள்கின்றனர். சாலைகளில் வாகனங்கள் கண்டபடி நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஒருபுறம் இருக்க மறுபுறம் குடிநீர் பிரச்சனை தீராத கேள்விக் குறியாகவே உள்ளது. ஆண்டுதோறும் கோடி கணக்கில் டெண்டர் விடப்பட்டாலும் வேலைகள் முடிவடையாமல் இழுத்தடிக்கப்படுகின்றன அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்குப் பணியாமல் அரசு அதிகாரிகள் சாமானிய மக்களின் சேவகர்களாகச் செயல்பட்டு இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்தார்.

தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத சூழலை உருவாக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு முறையான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது அதிகாரிகள் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிசாய்ப்பார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-STAR சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts