விளையாட்டுப் போட்டி, பரிசுகள், அன்னதானத்தோடு கோலாகலமாக நடந்த எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியம் வீரப்பகவுண்டனூர் கிளையில் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109-வது பிறந்தநாள் விழா மக்கள் திருவிழாவாக எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த விழாவிற்கு கழக மாவட்ட சிறுபான்மை அமைப்புச் செயலாளர் திரு. டி.எல். சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.​
மேலும் எம்ஜிஆர் அவர்களின்
​பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்காகப் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டன. போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பயனுள்ள பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வாக புரட்சித் தலைவரின் வழியில் ஏழை எளிய மக்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பிரம்மாண்டமான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-STAR சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts