​வால்பாறை தேயிலை தோட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்! – சி.ஐ.டி.யு (CITU) சார்பில் எழுச்சிமிகு பொதுக்கூட்டம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி: வால்பாறையில் 1956-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு வெறும் 10 பைசா கூலி உயர்வு கேட்டு போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் சி.ஐ.டி.யு (CITU) சங்கம் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறை தியாகிகள் சி.ஐ.டி.யு நினைவகத்தில் மாநில பொருளாளர் ராஜேந்திரன் சங்கக் கொடியினை ஏற்றி வைத்தார் அதனைத் தொடர்ந்து உயிர்நீத்த தோழர்களின் நினைவாக தீபச்சுடர் ஏந்தி அவர்கள் உயிர்நீத்த காவல் நிலையம் முன்பு அஞ்சலி செலுத்தப்பட்டது. தியாகிகளின் வழியில் என்றும் நடப்போம் என்ற முழக்கங்களுடன் அக்கா மலை பேருந்து நிலையம் வரை நடைபெற்ற எழுச்சி ஊர்வலத்தில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

வால்பாறை P.பரமசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆனைமலை கனகராஜ், கோவை வேளாங்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்வைத்த முக்கிய கோரிக்கைகள்;-

எஸ்டேட் நிர்வாகங்களுக்கான நில குத்தகை காலம் முடிவடைய உள்ள நிலையில் தமிழக அரசு அந்த நிலங்களை கையகப்படுத்த வேண்டும்.
3-4 தலைமுறைகளாக சொந்த வீடு இல்லாமல் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்குதலா 3 சென்ட் நிலம் வழங்கி மத்திய மாநில அரசுகள் மூலம் நிரந்தர வீடுகள் கட்டித் தரப்பட வேண்டும்.
எஸ்டேட் பகுதிகளில் சாலை வசதி வால்பாறை நகரில் தட்டுப்பாடற்ற குடிநீர் விநியோகம் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
வனவிலங்கு தாக்குதல்களில் இருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்க நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்.
தமிழக அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.

கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, வேணுகோபால், சரவணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். அழிந்து வரும் தேயிலை தொழிலையும் அதை நம்பியுள்ள தொழிலாளர்களையும் பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
​நிகழ்வின் நிறைவாக சரவணன் மற்றும் நேதாஜி ஆகியோர் நன்றியுரை ஆற்றினர் இந்த வீரவணக்க நாள் நிகழ்வு வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள்
செய்தியாளர்
-𝚂𝚃𝙰𝚁 𝙼.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts