
கோவை மாவட்டம் பொள்ளாச்சி காராள வம்சம் கலைச்சங்கத்தின் 100-வது அரங்கேற்றப் பெருவிழா வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு கோவை சாலை கொங்கு சிட்டி அருகில் சிறப்பாக நடைபெற உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் நோக்கில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காராள வம்சம் கலைச்சங்கம் கடந்த 7 ஆண்டுகளாகத் தொடர்ந்து வள்ளிக்கும்பி பயிற்சியை அளித்து வருகிறது. குறிப்பாக பெண்களிடையே தெய்வீகக் கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பல நூறு கலைஞர்களை உருவாக்கி வருவதன் மைல்கல்லாக இந்த 100-வது அரங்கேற்ற விழா அமைகிறது.
சக்தி குழுமத் தலைவர் டாக்டர் மா. மாணிக்கம் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்குகிறார். சிரவை ஆதீனம் நான்காம் பட்டம் குருமகா சந்நிதானம் திருப்பெருந்திரு இராமாரனந்த குமரகுருபர சுவாமிகள் நேரில் பங்கேற்று ஆசியுரை வழங்க உள்ளார்.
பெருந்துறை கொங்குநாடு கலைக்குழுவின் நிறுவனர் கலைமாமணி திரு. K.K.C. பாலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கலைஞர்களைச் சிறப்பிக்க உள்ளார். இவர்களுடன் பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் நலச் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 100-வது அரங்கேற்ற விழாவைக் காணப் பொதுமக்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்குமாறு காராள வம்சம் கலைச்சங்க ஆசிரியர் திரு. ச. சிவக்குமார் மற்றும் விழாக்குழுவினர் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-𝚂𝚃𝙰𝚁 𝙼.சுரேஷ்குமார்.












