
வாலபாறை தமிழக அரசு வழங்கி வரும் மாதம் 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு முழுமையாகச் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வணிகர் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அவ்வமைப்பின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் 𝗣.பரமசிவம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, வால்பாறை பகுதியில் குறைந்த சம்பளத்தில் பணிபுரியும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மாற்றுத் தொழில் இன்றி மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு இந்த 1000 ரூபாய் வாழ்வாதாரத்திற்கு பெரும் உதவியாக இருக்கும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உரிமைத் தொகை தொடர்பாக தாலுகா அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்குச் சரியான பதில் கிடைப்பதில்லை. இதனால் சுமார் 100 கிலோ மீட்டர் பயணம் செய்து மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் பணமும் நேரமும் வீணாவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மற்றும் வால்பாறை பகுதியில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள் அனைவருக்கும் தேர்தலுக்கு முன்பாகவே மகளிர் உரிமைத் தொகையை வழங்க வேண்டும். ஒவ்வொரு கிராம அலுவலகங்களிலும் இதற்காகத் தனி அலுவலரை நியமித்து, பொதுமக்கள் எளிதில் பயன்பெற அரசு வழிவகை செய்ய வேண்டும். எந்தவித எதிர்பார்ப்புமின்றி பொதுநலன் கருதி இக்கோரிக்கையை முன்வைப்பதாக தமிழக வணிகர் சம்மேளனம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக உங்கள் செய்தியாளர்,
-𝗦𝗧𝗔𝗥 𝗠. சுரேஷ்குமார்.











