
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வக்கம்பாளையம் கிராமத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் இயற்கை விவசாய முறைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் நேரடி செயல்முறை விளக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிகழ்ச்சியில் பயிர் வளர்ச்சியைத் தூண்டும் இயற்கை திரவ உரமான முட்டை அமினோ அமிலம் (Egg Amino Acid – EAA) தயாரிக்கும் முறை குறித்து மாணவர்களால் விரிவாக விளக்கப்பட்டது. ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து குறைந்த செலவில் விளைச்சலை அதிகரிப்பதே இந்த பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
முட்டை மற்றும் வெல்லம் போன்ற எளிய பொருட்களைப் பயன்படுத்தி 10 முதல் 15 நாட்கள் புளிக்க வைப்பதன் மூலம் இந்த உரத்தை எவ்வாறு தயாரிப்பது என்பதை மாணவர்கள் விவசாயிகளுக்கு நேரலையாகச் செய்து காட்டினர்.
இந்த திரவ உரத்தின் நன்மைகள் குறித்து மாணவர்கள் கூறுகையில்
இது மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது
பயிர்களுக்குத் தேவையான நைட்ரஜன் சத்துக்களை இயற்கையாக வழங்குகிறது
இதனை இலைத் தெளிப்பாகப் பயன்படுத்தும்போது செடிகள் செழித்து வளர்வதோடு பூக்கள் மற்றும் காய்களின் உற்பத்தியும் கணிசமாக அதிகரிக்கும் எனத் தெரிவித்தனர்.
குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய இந்த இயற்கை முறை குறித்து வக்கம்பாளையம் கிராம விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டினர் பயிற்சியின் போது தங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்ற விவசாயிகள் இத்தகைய இயற்கை முறைகளைத் தங்கள் நிலங்களில் பின்பற்ற உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் மாணவர்களின் இந்த முயற்சி கிராம மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வால்பாறை P.பரமசிவம்











