டூரிஸ்ட் வேனும்,இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல்!!

தூத்துக்குடி மாவட்டம் – விளாத்திகுளம் வட்டம், வைப்பார் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மாலை டூரிஸ்ட் வேனும்,இருசக்கர வாகனமும் மோதிய விபத்தில் பல்லாகுளம் கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குருசாமி (40), முத்துலட்சுமி (48), சுமித்திரன்(3),முகில்(5) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த முருகம்மாள் (60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததை அடுத்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று சம்பந்தப்பட்ட மருத்துவரை தொடர்பு கொண்டு காலையில் பிரேத பரிசோதனை துரிதமாக நடைபெறுவதற்கு அறிவுறுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

உடன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசி விஸ்வநாதன் உள்ளிட்டோர் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts