
கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் பல தசாப்த கால கனவுத் திட்டமான ஆனைமலை நல்லாறு திட்டம் சுமார் 60 ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளதைக் கண்டித்து நாளை (மார்ச் 1) பொங்கலூர் பி.ஏ.பி (PAP) அலுவலகம் முன்பாகப் பிரம்மாண்ட அறப்போராட்டம் நடைபெறவுள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் நீர் மேலாண்மைக்காக 12 முக்கிய அணைகளைக் கட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 11 அணைகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் ஆனைமலை நல்லாறு திட்டம் மட்டும் அரசியல் மற்றும் காலச் சூழ்நிலைகளால் கைவிடப்பட்டது. இதன் விளைவாக இன்று இப்பகுதி விவசாயிகள் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்போது மேல் நீராரில் கிடைக்கும் தமிழகத்திற்குரிய தண்ணீர் பரம்பிக்குளம் சென்று அங்கிருந்து திருமூர்த்தி அணைக்கு வருகிறது. இந்த வழித்தடத்தில் தண்ணீர் வந்து சேர சுமார் 3 நாட்கள் ஆகிறது. இதனால் அதிகப்படியான நீர் வீணாவதோடு விவசாயிகளுக்குக் குறைவான அளவே தண்ணீர் கிடைக்கிறது.

ஆனைமலை நல்லாறு திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேல் நீராரிலிருந்து நேரடியாக 3 மணி நேரத்திலேயே தண்ணீர் விவசாய நிலங்களைச் சென்றடையும். நீர் வீணாவது முற்றிலுமாகத் தடுக்கப்படும். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்ந்து நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.
இதுவரை ஏமாந்தது போதும் இனி ஏமாற மாட்டோம் என்ற முழக்கத்தோடு ஆனைமலை நல்லாறு தண்ணீர் இயக்கம் அரசியல் சார்பற்ற தமிழக விவசாய சங்கங்கள் மற்றும் ஏழு முனை இளைஞர் அணி சார்பில் நாளை காலை 10 மணியளவில் பொங்கலூரில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்குகிறது.
புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு விவசாயிகளின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று பதவியேற்றவுடன் இத்திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-P.பரமசிவம், வால்பாறை.











