
கிணத்துக்கடவு கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக இணைச் செயலாளராக சாந்தலிங்கம் அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்காக அதிமுக தலைமைக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் கிணத்துக்கடவு வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சாந்தலிங்கம் அவர்களை மாவட்ட இணைச் செயலாளராக நியமித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு முதற்கண் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த நியமனத்திற்கு உறுதுணையாக இருந்த கழகத் தலைமை நிலையச் செயலாளர் மற்றும் கோவை புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி (M.L.A)
முன்னாள் அமைச்சர் செ. தாமோதரன் (M.L.A) அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் விஜயகுமார்
ஆகியோருக்கும் கிளைக் கழக நிர்வாகிகள் தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை முன்னிட்டு வீரப்பகவுண்டனூர் மற்றும் கோவிந்தராயபுரம் கிளைக் கழகங்கள் மற்றும் கிணத்துக்கடவு வடக்கு ஒன்றியம் சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புதிய மாவட்ட இணைச் செயலாளர் சாந்தலிங்கம் அவர்களுக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். கட்சியின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து பாடுபடப் போவதாக இந்த நியமனத்தின் போது நிர்வாகிகள் உறுதி ஏற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
–𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.











