
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்தில் இருந்து ஏராளமான நாம் தமிழர் கட்சியினருடன் விவசாயிகளின் அடையாளமான மாட்டு வண்டியில் ஏர் கலப்பையை சுமந்தவாறு தாரை தப்பட்டை அடித்து ஆரவாரத்துடன் ஊர்வலமாக விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தேர்தல் நடத்தை விதியின் காரணமாக வேட்பு மனு தாக்கல் செய்யும் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் அரசியல் கட்சி வாகனமோ அரசியல் கட்சியினர் கூட்டமாகவோ செல்லக்கூடாது என்று காவல்துறையினர் தடுப்பு நிறுத்தியதால் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி உட்பட நான்கு பேர் மட்டுமே விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுபாவிடம் வேட்பு மனு பூர்த்தி செய்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர் பொறியியல் பட்டதாரியான (BE) நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி கடந்த 2021 அன்று தேர்தல் இந்த விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












