தீயணைப்பு – மீட்புப் பணிகள் துறை போலி ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டது!!

தமிழ்நாடு தீயணைப்பு – மீட்புப் பணிகள் துறை இயக்குநர் திருமதி சீமா அகர்வால் டிஜிபி அவர்களது உத்தரவின் படி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு, உயரமான கட்டிடங்களில் தீ மற்றும் பிற இடர்பாடுகளின் போது எளிதாக வெளியேறுவது குறித்தும் காயம்பட்டவர்களை மீட்கும் முறை குறித்தும் மின்சார தீ விபத்தினை அணைப்பது குறித்தும் தீயணைப்பான்களை பயன்படுத்தும் விதம் குறித்தும் போலி ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த பயிற்சி தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் திரு கருணாகரன் அவர்கள் தலைமையிலும் அரசு மருத்துவமனை RMO திரு சைலஸ் ஜெயமணி அவர்கள் முன்னிலும் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் த.கார்த்திகேயன், தூத்துக்குடி அனல் தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் திரு முருகையா, தூத்துக்குடி நிலைய சிறப்பு நிலைய அலுவலர் திரு. காமாட்சிநாதன் மற்றும் சிப்காட் மற்றும் தூத்துக்குடி நிலைய வீரர்களால் நடத்தப்பட்டது. பயிற்சியில் திரளாக கலந்து கொண்ட செவிலியர்கள், பணியாளர்கள், நோயாளிகள் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக நன்றி தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts