தேயிலை வாசம் தீராத பாசம் வெற்றியைத் தீர்மானிப்பது எது.? வால்பாறை தொகுதி ஒரு சிறப்புப் பார்வை.!

மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் அமைந்துள்ள எழில்மிகு தொகுதி வால்பாறை (தனி) இங்கு வீசும் தேயிலை வாசம் அளவுக்கு மக்களின் அரசியல் எதிர்பார்ப்புகளும் தீர்க்கப்படாத சவால்களும் மிகவும் அடர்த்தியானவை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறை தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்திகளாக இருப்பவர்கள் தேயிலை மற்றும் காபி தோட்டத் தொழிலாளர்கள். சுமார் 75% வாக்காளர்கள் இந்தத் துறையைச் சார்ந்தவர்களே. இங்கு அரசியல் கட்சிகளை விட தொழிற்சங்கங்களின் செல்வாக்கே வேட்பாளர்களின் தலைவிதியைத் தீர்மானிக்கிறது.

இயற்கை அழகு ஒருபுறம் இருந்தாலும் இப்பகுதி மக்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள் ஏராளம் அண்மைக்காலமாக சிறுத்தைகள் மற்றும் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. உயிரிழப்புகளும், பயிர்ச் சேதங்களும் தொடர்கதையாகி வரும் நிலையில் இதற்கான நிரந்தரத் தீர்வு என்பது இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளது. அவசர சிகிச்சைக்காக 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து பொள்ளாச்சிக்கு ஓட வேண்டிய அவலநிலை உள்ளது. வால்பாறையில் அதிநவீன வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை என்பது இப்பகுதி மக்களின் நீண்டகாலக் கனவு.
தேயிலைத் தொழிலைத் தாண்டி மாற்று வேலைவாய்ப்புகள் இல்லாததால் இளைஞர்கள் சமவெளிப் பகுதிகளுக்கு கோவை, திருப்பூர் புலம் பெயர்ந்து வருவது தொகுதியின் பெரும் கவலையாக உள்ளது.

பாரம்பரியமாக அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுமே இங்கு வலுவாக உள்ளன இருப்பினும் தொழிற்சங்கப் பின்னணி கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இங்கு கணிசமான வாக்கு வங்கி உண்டு கடந்த தேர்தல்களில் வாக்குறுதிகளாகத் தரப்பட்ட பட்டா வழங்கும் திட்டம் மற்றும் ஊதிய உயர்வு ஆகியவை இந்த முறையும் பிரதான தேர்தல் கோஷங்களாக எதிரொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சுற்றுலாத் துறையை மேம்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்காத வகையில் புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வரும் வேட்பாளருக்கே தங்களின் ஓட்டு எனத் தொகுதி மக்கள் உறுதியாக உள்ளனர்.

ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியில் இருப்பதால் இங்கு ஒரு செங்கல்லை நகர்த்தக் கூட மத்திய வனத்துறையின் அனுமதி தேவை என்பது இப்பகுதி மேம்பாட்டிற்குப் பெரும் முட்டுக் கட்டையாக உள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts