​பொள்ளாச்சி பெருமாள் செட்டி வீதி நீண்ட காலமாக மூடப்படாத குழியால் அபாயம்! – பொதுமக்கள் அச்சம்!!

பொள்ளாச்சி நகரின் மிக முக்கியமான மற்றும் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட பகுதிகளில் ஒன்றான பெருமாள் செட்டி வீதியில் சாலையின் நடுவே நீண்ட காலமாக மூடப்படாமல் இருக்கும் ஒரு குழி அப்பகுதி மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்தப் பகுதியில் வணிக நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் அதிகம் உள்ளதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்தே காணப்படும் சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்தப் பள்ளம் குறித்து எவ்வித எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்படவில்லை.

தெருவிளக்கு வெளிச்சம் குறைவாக இருக்கும் சமயங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
​முதியவர்களும் குழந்தைகளும் சாலையைக் கடக்கும்போது இந்தப் பள்ளத்தில் தடுமாறி விழும் சூழல் நிலவுகிறது.

இந்தப் பகுதியில் அடிக்கடி சிறு சிறு விபத்துக்கள் நடந்து வருகின்றன மழை பெய்யும் காலங்களில் இந்தக் குழியில் நீர் தேங்கி நிற்பதால் அதன் ஆழம் தெரியாமல் வாகனங்கள் சிக்கிக் கொள்கின்றன ஏதேனும் ஒரு பெரிய உயிர்ச்சேதம் அல்லது அசம்பாவிதம் நடக்கும் வரை அதிகாரிகள் காத்திருக்கப் போகிறார்களா.? என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

​பொதுமக்களின் பாதுகாப்பு கருதி நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு இந்தப் பள்ளத்தைச் சீரமைக்க வேண்டும். விபத்துக்கள் நிகழும் முன்பே போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts