வால்பாறையில் பாதியில் நிற்கும் அடுக்குமாடி குடியிருப்பு! தேர்தல் அவசரத்தில் திறப்பு விழா – பயனாளிகள் கடும் அதிருப்தி!!

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுமானப் பணிகள் முழுமையடையாத நிலையில் அரசு அடுக்குமாடி குடியிருப்புகள் அவசர கதியில் திறக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் சுமார் 12.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 80 குடியிருப்புகள் கட்டும் பணி கடந்த நான்கு ஆண்டுகளாக மெத்தனமாக நடைபெற்று வந்தது. இதில் 70 வீடுகள் பயனாளிகளுக்கும் 10 வீடுகள் நகராட்சித் தூய்மைப் பணியாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டன.

சொந்த வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தலா 1 லட்சம் ரூபாய் செலுத்திவிட்டோம் கடந்த ஆண்டு மாவட்ட ஆட்சியர் மூலம் அங்கீகாரக் கடிதம் வழங்கப்பட்டும் இன்று வரை வீட்டின் சாவி எங்களிடம் ஒப்படைக்கப்படவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர் பயனாளிகள்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன்பே பணிகளை முடிக்காமல் தமிழக முதல்வர் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்திருப்பது வெறும் கண்துடைப்பு நாடகமே என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தற்போது வரை குடியிருப்பு வளாகத்தில் குடிநீர் இணைப்பு மற்றும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, வனத்துறைக்குச் சொந்தமான மரங்கள் இடையூறாக இருப்பதால் மின் இணைப்பு வழங்க முடியவில்லை. அனுமதி கிடைத்தவுடன் மரங்கள் அகற்றப்பட்டு விரைவில் வீடுகள் ஒப்படைக்கப்படும் என வழக்கமான காரணங்களையே கூறி வருகின்றனர்.

முறைப்படி மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளைச் செய்து தந்து உடனடியாகத் தகுதியான பயனாளிகளிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. தவறினால் உரிய அதிகாரிகளைக் கண்டித்துப் போராட்டம் நடத்தவும் மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர்
உங்கள்
𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts