உட்கோட்ட காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வையிட்டு ஆய்வு!!

தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல்துறையினரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல்துறையினரின் உடற்பயிற்சி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரோச் பூங்கா பகுதியில் வைத்து (21.03.2026) காலை நடைபெற்றது. மேலும் காவல்துறையினர் தங்கள் உடல்நலத்தை பேணி காக்கும் பொருட்டு ரோச் பூங்கா பகுதியில் இருந்து தெர்மல்நகர் ரயில்வே கேட் வரை சென்று நடைபயிற்சி மேற்கொண்டனர்.

மேற்படி உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப அவர்கள் ஆய்வு செய்து, தூத்துக்குடி நகர உட்கோட்ட காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார். பின்னர் போலீசாரின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுனில் மற்றும் காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts