தமிழகத்தில் தற்போது நடைபெற இருப்பதும் ஓரு போா் தான் அதில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும்!!- நல்லகண்ணு படத்திறப்பு விழாவில் அமைச்சர் கீதாஜீவன் சூளுரை


தூத்துக்குடி மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு படத் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை செயற்குழு உறுப்பினர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஐஎன்டியுசி ராஜு, சிஐடியு ரசல், ஏஐடியுசி லோகநாதன், தொமுச சுசி ரவீந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் ஏபிசிவி. சண்முகம் ஏற்ப்புரை வழங்கினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மறைந்த கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு படத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன் திறந்து வைத்து பேசுகையில் நல்லகண்ணு ஐயா படத்தை திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெரிய பாக்கியமாக நான் கருதுகிறேன். அவா் மறைந்த போது நான் சென்னைக்கு சென்று அவருக்கு நோில் அஞ்சலி செலுத்தினேன். ஏனென்றால் நமது மாவட்டத்தை சார்ந்தவர் என்பது மட்டுமல்ல, அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், எதிர்கால இந்தியாவை உருவாக்கக்கூடிய இளைஞர்களும் பின்பற்ற வேண்டிய ஒரு தலைவர். அவருடைய சமூக செயல்பாடு, இந்திய விடுதலை போராட்ட களங்கள், பல்லாண்டு சிறைக் கொடுமை, சித்திரவதைகள் என தனது இளமைக் காலம் முழுவதும் நாட்டுக்காக, தமிழ்ச் சமூகத்திற்காக போராளியாக வாழ்ந்தவர்.

அவருடைய இறுதி காலம் வரை சமுதாய மேம்பாட்டுக்காகவும், விவசாய தொழிலாளர்களுக்காகவும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும் போராட்ட களத்தில் நின்றவர். தான் கொண்டுள்ள கொள்கைகளில் இம்மியளவும் மாறாமல் தன்னுடைய போராட்ட களத்தை வடிவமைத்தவர். தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக தன்னை வாழ்க்கையை அர்ப்பணித்த மாபெரும் பொதுவுடைமை தலைவர். அவரது எளிமை, நேர்மை, கொள்கைப் பிடிப்பு, சமரசமற்ற போராட்ட குணம் ஆகியவை தமிழ் சமுதாய ஆண்களும், பெண்களும், இளைஞர்களும் ஒரு பாடமாக கற்றுக் கொண்டு அதை நாம் பின்பற்ற வேண்டும். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின், அரசு மரியாதையோடு நல்லடக்கம் செய்ய ஏற்பாடு செய்து, இந்த மாபெரும் பொதுவுடமை தலைவருக்கு வீரவணக்கம் வீரவணக்கம் என்று கரங்களை உயர்த்தி முழக்கமிட்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து உணர்ச்சி பெருக்கெடுக்க வைத்தது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக முதலமைச்சர் ஸ்டாலின், தகைசால் தமிழர் விருதை வழங்கி கௌரவித்தது. ரூ 10 லட்சத்துடன் விருது வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த 10 லட்சம் ரூபாயுடன் தனது சொந்த பணம் ரூ.5000 சேர்த்து, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய மிகச் சிறந்த மனிதர் நல்லகண்ணு. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, உள்ளிட்ட தென் மாவட்ட பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள், பாட்டாளி மக்கள், தஞ்சை பகுதி விவசாய தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர். கடனா நதியின் நீரை சேமிக்க அணை கட்டியே ஆக வேண்டும் என்று ஒன்பது நாள் தொடர் உண்ணாவிரதம் இருந்து அதில் வெற்றி கண்டவர் இவ்வாறு தான் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்து எளிமையாக வாழ்ந்து பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு உதாரணமாக வாழ்ந்து சிவப்பு நட்சத்திரமாக வழிகாட்டி வருகின்றார்.

இவரது போராட்ட குணம், கொள்கை பிடிப்பு, தன்னலமற்ற வாழ்வியலை இளைய சமூகத்தினருக்கு கொண்டு சேர்க்க வேண்டும். ஏனென்றால் இளைய சமுதாயத்தினர் லட்சியமின்றி, கொள்கையின்றி பயணிக்கிறார்கள். இவர்களுக்கு நமது தன்னலமற்ற தலைவர்களின் தியாகங்களை, போர்க்குணம் மிக்க அரசியலை எடுத்துக் கூற வேண்டும். இப்பொழுது நடைபெறுவதும் ஒரு போர் போல தான் பாசிச அணியினருக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அணியினருக்கும் நடைபெறவுள்ள ஒரு போர். தமிழ்நாட்டை காத்திட நம்முடைய கொள்கைகளை, தமிழ்நாட்டு உரிமையை மீட்டெடுக்க தமிழ் மொழியை காத்திட தமிழ் மக்களது வாழ்வு மென்மேலும் சிறக்க நிச்சயமாக இந்த தேர்தலிலே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றே ஆக வேண்டும். தூத்துக்குடி தொகுதி மட்டுமல்ல அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெற நாம் கடுமையாக உழைத்திட வேண்டும் என்பதை கூறிக்கொண்டு சிவப்பு நட்சத்திரமாக வழிகாட்டும் நல்லகண்ணுவுக்கு என்னுடைய செவ்வணக்கத்தை செலுத்துகிறேன் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

விழாவில் நல்லகண்ணு குடும்பத்தினர் பாரதி ராமசாமி, முன்னாள் எம்எல்ஏ டேனியல் ராஜ், மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கரும்பன், மதிமுக நகர செயலாளர் முருகபூபதி, விசிக மாவட்ட செயலாளர் விமல் வங்காளியாா், சமக மாவட்ட செயலாளர் அற்புத ராஜ், தவாக மாவட்ட செயலாளா் கிதர்பிஸ்மி, தேமுதிக தொகுதி பொறுப்பாளர் வல்லரசு துரை, இஸ்லாமிய கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சம்சுதீன், திராவிடா் கழகம் பால்ராஜேந்திரன், திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர்கள் சக்திவேல், டென்சிங், ஹான்ஸ், சுரேஷ்குமார், பெருமாள்கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் தனலெட்சுமி, நாகேஸ்வரி, மரியகீதா, வட்டபிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் நக்கீரன் மகாராஜன், உள்பட பலா் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் சந்திரபோஸ், கற்பகக் கனி, எடிண்டா ஆகியோர் செய்திருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts