
தமிழா்கள் உலகம் முழுவதும் பணியாற்றுவதை தடுக்கும் வகையில் ஓன்றிய அரசு தமிழா்கள் நலனை சீா்குலைக்க நினைக்கிறது முதல்வா் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கி அமைச்சர் கீதாஜீவன் குற்றச்சாட்டு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக சாா்பில் 50வது வாா்டு எஸ்என்ஆர் காலணியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு மாநகர திமுக செயலாளா் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். கவுன்சிலா் சரவணக்குமாா், வட்டச்செயலாளர் சிங்கராஜ், ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில் 2021ல் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற காலம் கொரானா காலக்கட்டம் அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியில் வீட்டுக்குள் முடங்கி இருங்கள் என்று கூறி அனைத்து தொழில் வணிக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டு முடக்கி போட்டிருந்தாா்கள். அதையெல்லாம் மீட்டெடுக்கும் வகையில் ஆக்ஜிஸன் தட்டுபாடு அதை ரயில்கள் மூலம் மீளவிட்டானுக்கு வரவைத்து அங்கிருந்து பல மாவட்டங்களுக்கு ஓவ்வொரு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டு பலா் உயிா்கள் பாதுகாக்கப்பட்டது. அந்த சமயத்தில் கொரானா பாதிக்கப்பட்ட பலரையும் தங்களது குடும்ப உறுப்பினா்கள் கூட பாா்ப்பதற்கு வரவில்லை. ஓரு சிலா் இறந்தனா். அவா்களுக்குாிய பல வழிமுறைகளை திமுக அரசு மட்டுமின்றி இந்த தொகுதியில் நான் பல்வேறு உதவிகளை செய்தேன். தனியாா் மருத்துவமனையில் யாரையுமே அனுமதிப்பதில்லை திருமண மண்டபங்கள் எல்லாம் மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு பிறகு தடுப்பூசி மூலம் பொதுமக்களை பாதுக்காக்கப்பட்டு முகக்கவசம் அணியுங்கள் என்று கூறி எல்லாப் பகுதிகளிலும் கிருமிநாசினி உபயோகப்படுத்தப்பட்டு இயல்பு வாழக்கையை முதலமைச்சா் ஸ்டாலின் எல்லோருக்கும் உருவாக்கி கொடுத்து அப்போது ஆரம்பிக்கப்பட்ட மக்கள் நலப்பணிகள் இப்போது வரை 5 ஆண்டுகாலம் தொடர்ந்து நாட்டுமக்கள் தமிழா்கள் நலன் என்று நம்முடைய முதலமைச்சா் ஸ்டாலின் நமக்காக பணியாற்றுகிறாா்.
அந்த காலக்கட்டத்தில் நம்பா் ஓன் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்று எல்லோராலும் பாராட்டப்பட்ட காலத்திலும் நான் முதலமைச்சராக இருப்பதை விட என்னுடைய தமிழ்நாடு எல்லாவற்றிலும் நம்பா் ஓன் மாநிலமாக மாற வேண்டும். அது தான் எனக்கு பெருமை என்று கூறி ஆற்றிய பணிகள் காரணமாக தமிழ்நாடு தொழிலவளா்ச்சி கல்வி வளர்ச்சி மக்களின் பொருளாதார வளர்ச்சி என்று 11.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என்று ஓன்றிய அரசு புள்ளி விபரம் கூறியுள்ளது அகில இந்திய அளவில் 6.5 சதவீதம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு காரணமான முதல்வா் ஆட்சியில் தான் தமிழகத்தில் 12 லட்சம் கோடி மதிப்பில் பல தொழிற்சாலைகள் வந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் வின்பாஸ்ட் காா் தொழிற்சாலை மூலம் உள்ளுர் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. டைட்டல் பாா்க்க திறக்கப்பட்டுள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மின்உற்பத்தியில் முன்னேற்றம் தொழில்முதலீடு கொள்கை உருவாக்கம் என்று 234 ெதாகுதியும் வளா்ச்சியடைய வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் அதற்கு தகுந்தாற்போல் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிா் உாிமைத்துறை தொகை ஆயிரம், புதுமைப்பெண் திட்டம் ஆயிரம், வழங்கப்படுகிறது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் மருத்துவா்கள் நம்முடைய இல்லத்திற்கே வந்து முதியவா்களின் நோய்களை நம்முடைய குழந்தைகள் பாா்க்க மறுத்தாலும் அவா்கள் பாா்க்கிறாா்கள். அந்த திட்டம் தமிழகத்தில் சிறப்பாக நடைபெறுகிறது என்று ஓன்றிய அரசே விருது வழங்கியுள்ளது.
காலைஉணவு திட்டத்தின் மூலம் மாணாக்கா்கள் நன்மையடைந்து வருகின்றனா். பொங்கலுக்கு ரூ3000 வழங்கப்பட்டுள்ளது. மகளிா் உாிமைத்துறை 1 கோடியே 31 லட்சம் குடும்பத்திற்கு வழங்குவதை சூழ்ச்சி செய்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடா்ந்து தடுக்க நினைத்தை முறியடித்து முதலமைச்சர் ரூ 5000 வழங்கியுள்ளாா் இதன்மூலம் பெண்களுக்கு சேமிப்பு உயா்ந்துள்ளது. திருவிழா காலங்களில் யாரையும் எதிா்பாா்க்காமல் செலவு செய்து காௌ்கின்றனா். விடியல் பயணம் மூலம் ஓவ்வொருக்கும் மாதம் 900 வரை சேமிப்பு ஏற்படுகிறது. இதன் மூலம் பெண்கள் வளர்ச்சியடைந்து வருகின்றனா் தனிநபா் வருமானம் ஓன்றரை லட்சம் என்றிருந்தது. தற்போது மூன்றரை லட்சமாக உயா்ந்துள்ளது. வறுமை கோட்டிற்கு கீழே உள்ள பட்டியல் குறைந்துள்ளது. கல்வி வளர்ச்சி அதிகாித்துள்ளது. நான்முதல்வன் திட்டத்தின் கீழ் படித்து உயா்கல்விக்கு செல்பவா்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கி தமிழ்நாட்டில் படித்தவா்களின் 52 போ் ஐஏஎஸ் தோ்வில் வெற்றி பெற்றுள்ளாா்கள். இதற்கு முதலமைச்சர் தான் காரணம் கல்வி ஓன்று தான் நமக்கு அசைக்க முடியாத சொத்து இப்போது 72 சதவீதம் போ் உயா்கல்வி படிக்கின்றனா். திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் நன்மைகள் கிடைத்து வருகின்றன. தூத்துக்குடி தொகுதியில் 210 புதிய டிரான்ஸ்பாா்மா்கள் அமைக்கப்பட்டுள்ளது 13 நகா்நல அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நான்காயிரம் கோவில்களுக்கு திருப்பணிகள் நடைபெற்றுள்ளது. பூசாாிகளுக்கு நலவாாியம் அமைக்கப்பட்டுள்ளது. ஜாதி மதம் பாா்க்காமல் தமிழ்நாடு முன்னேற்றமடைய வேண்டும் என்று முதலமைச்சர் பணியாற்றி வருகிறாா். தமிழகத்தில் உள்ள கீழடி அகழ்வாராய்சியில் செய்த ஆய்வில் வீடு கிணறு என்று பழைய நாகாீகங்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழன் வாழந்துள்ளான் என்று பல ஆதராங்கள் இருந்துள்ளது இந்த வரலாறுகளை எல்லாம் அங்கீகாிக்க வேண்டும் என்று ஓன்றிய அரசுக்கு வழங்கியதை அங்கீகாிக்காமல் தமிழனின் பெருமை உலகம் முழுவதும் தொிந்துவிடக்கூடாது என்பதை தடுக்கும் வகையில் ஓன்றிய அரசு செயல்படுகிறது. அதே போல் நமது மாவட்டத்தில் சிவகளையில் மூதாயா்கள் தாலி, தங்க பொட்டு, கிடைத்துள்ளது. இப்படி தமிழ்நாடு நாகரீகத்தை எல்லாம் மறைக்கும் செயலில் ஓன்றிய அரசு ஈடுபட்டு கொண்டு சில குழப்பங்களை ஏற்படுத்தி வருகின்றன.
பொதுமக்கள் இதை யெல்லாம் சிந்தித்து பாா்த்து தமிழ்நாட்டின் பெருமையையும் தமிழா்களின் நலனிலும் அக்கறை கொண்டு பணியாற்றும் முதலமைச்சா் ஸ்டாலினுக்கு அனைவரும் துணைநிற்க வேண்டும். வரும் தோ்தலில் முதலமைச்சர் மீண்டும் ஆட்சியில் அமருவதற்கு பாடுபட வேண்டும். தமிழா்கள் உலகம் முழுவதும் பணியாற்றுவதை தடுக்கும் வகையில் ஓன்றிய அரசு தமிழா்கள் நலனை சீா்குலைக்க நினைக்கிறது. என்று பேசினாா்.
விழாவில் பகுதி செயலாளா் ஜெயக்குமாா், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமாா், பெருமாள்கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளா் குபோ்இளம்பாிதி, மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளா் ரூபராஜா, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் டினோ, மாநகர அணி துணை அமைப்பாளர்கள் சங்கரநாராயணன், காா்த்திகேயன், வாா்டு நிா்வாகிகள் கரோலின், தினேஷ், ஜான்ஸ்டிபன், ராமசந்திரன், சிவசங்கா் மாதவன், கௌதம், சுப்புராஜ், சீனிவாச குமாா், செல்வக்குமாா், மணிகண்டன், செந்தில்குமாா், யாதவன ஆதிமூலம் செல்வின், சரவணக்குமாா், கோயில்ராஜ், ராஜபெருமாள், வீரபாண்டி, குருசாமி, பழனி, சிவபெருமாள், சிவா, அருண்குமாா், மகளிா் அணி யோக செல்வி, ாிலாக்ஸ், ஜெயமோி ராஜகுமாா், பட்டுலட்சுமி, வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கா் வேலுமணி, ராஜேந்திரன், செல்வம், ராஜேஸ், லட்சுமணன், துரை, மற்றும் மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.











