தூத்துக்குடியில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது! – முன்னாள் அமைச்சா் எஸ். பி சண்முகநாதன் பங்கேற்பு!


தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாநகர பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமை வகித்து பேசுகையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் ஜெ வழியில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்க போகிறது என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. எனவே நாம் அனைவரும் இனிவரும் காலங்களில் தெருமுனைப் பிரச்சாரம் மூலம் கடந்த கால அதிமுக அரசின் சாதனைகள் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ள அதிமுகவின் தேர்தல் அறிவிப்புகளை வீடு வீடாக நேரில் மக்களிடம் எடுத்துகூற ேவண்டும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இங்கு யார் வேட்பாளர்கள் நின்றாலும் எடப்பாடியார் தான் மூன்று தொகுதிகளிலும் நிற்பதாக கருதி தேர்தல் பணிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 3 தொகுதிகள் தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுது என்பதை நிரூபிக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வரும் காலங்களில் தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் சுதாகர், மாவட்ட பொருளாளர் சேவியர், மாவட்ட அணி செயலாளர்கள் தனராஜ், பில்லா விக்னேஷ், பெருமாள், நிலா சந்திரன், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல் ராஜ், பகுதி செயலாளர்கள் முருகன், சந்தனப்பட்டு, ஜெய்கணேஷ், நட்டார் முத்து, சுடலைமணி, பேரூராட்சி செயலாளர் செந்தில் ராஜ்குமார், சாம்ராஜ், மற்றும் வட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts