எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகள் மீண்டும் தமிழகத்தில் தொடர எடப்பாடியார் ஆட்சி அமைய வேண்டும் – முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன்!!

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் 3ம் மையில் பகுதியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்திற்கு பகுதி செயலாளர் முருகன் தலைமை வகித்தார். பின்னர் அண்ணாநகரில் நடைபெற்ற கூட்டத்திற்கு பகுதி செயலாளர் நட்டார்முத்து மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முன்னாள் அமைச்சரும் மாநில வர்த்தக அணி செயலாளரும் மாநகர் மாவட்ட செயலாளரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் வேட்பாளரான சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில்: இந்தியா முழுவதும் நான்கு வழி சாலையை கொண்டு வந்து போக்குவரத்து பிரச்சனைகளுக்கு எளிதான தீர்வை ஏற்படுத்திக் கொடுத்தவர் பிரதமர் வாஜ்பாய். அதனால் தான் இன்று தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு 6 மணி நேரத்தில் செல்கிறோம். மதுரைக்கு 1½ மணி நேரத்தில் சென்று விடுகிறோம். பிரதமர் மோடி, அமித்ஷா தலைமையிலான அரசு இந்தியாவை வல்லரசாக மாற்ற வேண்டும் என்று சிறப்பான முறையில் பணியாற்றி வருகின்றனர். தற்போது பல பகுதிகளில் 6 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் செய்த திட்டங்கள் எடப்பாடியார் 4½ ஆண்டு காலம் சிறப்பாக செய்தார். திமுக ஆட்சியில் நிறுத்திய திட்டங்கள் எல்லாம் அதிமுக ஆட்சி அமைந்தால் தான் கிடைக்கும். அதற்கு மீண்டும் எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றி வெற்றிக்கனியை பறிப்போம் என்று பேசினார்.
கூட்டத்தில், அமைப்பு செயலாளர் சின்னதுரை, மாநில வர்த்தக அணி துணைச்செயலாளர் மில்லை ராஜா, மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், இணைச்செயலாளர்; செரினா பாக்கியராஜ், பொருளாளர் சேவியர், மாவட்ட அணி செயலாளர்கள் ராஜா, பெருமாள், சேகர், நடராஜன், துரைசிங், துணை செயலாளர்கள் ஜீவா பாண்டியன், மனுவேல் ராஜ், திருச்சிற்றம்பலம், சிவா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல இணைச்செயலாளர் வக்கீல் மந்திரமூர்த்தி, தலைமை பேச்சாளர்கள் பொற்கிளி தேவராஜ், முருகானந்தம், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பகுதி செயலாளர்கள் ஜெயகணேஷ், சந்தனபட்டு, சுடலை மணி, முன்னாள் கவுன்சிலர்கள் சாந்தி, மெஜிலா, சந்திரா, வட்டச்செயலாளர்கள் பூக்கடை வேலு, மணிகண்டன், அருண்குமார், பூர்ணசந்திரன், கொம்பையா, பகுதி துணைச்செயலாளர் கணேசன், தொழிற்சங்க நிர்வாகிகள் சங்கர், பேச்சிமுத்து, டெரன்ஸ், பிஜேபி மாவட்டச்செயலாளர் ராஜேஸ், புரட்சி பாரதம் கட்சி மாவட்டச்செயலாளர் மாரிச்செல்வம், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்டச்செயலாளர் லெட்சுமணன், தமமுக லாரன்ஸ், அதிமுக நிர்வாகிகள் அந்தோணி கிரேஸ், சண்முகத்தாய், தமிழரசி, அன்னபாக்கியம், ராஜேஸ்வரி, இந்திரா, அகஸ்டின் உள்பட கூட்டணிக் கட்சியை சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts