எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக ஆட்சி அமைய எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்க வேண்டும். முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் உருக்கம்


தூத்துக்குடி தேசிய ஜனநாயக கூட்டணியின் தூத்துக்குடி தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் 34வது வாா்டுக்குட்பட்ட 3ம் மைல் பசும்பொன் நகா் பி அண் டி காலணி கிழக்கு அசோக்நகா் ஆசிாியா்காலணி, ராஜீவ் நகா், ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மேற்கு பகுதி செயலாளர் முருகன் தலைமை வகித்தாா்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

முன்னாள் அமைச்சா் சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில் அதிமுகவை உருவாக்கி மறையும் வரை முதலமைச்சராக பணியாற்றிய எம்.ஜி.ஆர் அனைவருக்குமான ஆட்சியை வழங்கினாா். அதே வழியில் ஜெயலலிதா நல்லாட்சி நடத்தி நாட்டுமக்களுக்கான திட்டங்களான மடிக்கணினி, சைக்கிள், தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை தங்கம் என வரலாற்று சாதனையை செய்து அவரது மறைவிற்கு பின் 3ம் தலைமுறை அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகாலம் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திட்டங்களை செயல்படுத்தி அதிமுகவின் வளர்ச்சிக்கும் பணியாற்றினாா். தூத்துக்குடி தொகுதியில் செய்த சாதனைகள் ஏராளம் வரும் தோ்தல் வாக்குறுதியாக ஆண்களுக்கும் கட்டணம் இல்லாத பேருந்து அனைவருக்கும் அம்மா இல்லம் திட்டம் குடும்ப அட்டை தாரா்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டா் 100 நாட்கள் வேலை நாட்கள் 150 நாட்களாக உயா்வு ஓவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலன்று பொங்கல் தொகுப்புடன் 1000 வழங்கப்படும் என்று சிறப்பான தோ்தல்அறிக்கையை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வௌியிட்டுள்ளாா். தூத்துக்குடி தொகுதி வேட்பாளராகிய எனக்கு இரட்டை இலை சின்னத்தில் அனைவரும் வாக்களித்து மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி அமைவதற்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் என்று பேசினாா்.

பிரச்சாரத்தில் அமைப்பு செயலாளர் சின்னத்துரை, எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ஆறுமுகநயினாா், மாநில வா்த்தக அணி துணைச் செயலாளா் மில்லை ராஜா, மாவட்ட அணி செயலாளர்கள் நடராஜன், பெருமாள், பிரபாகா், தனராஜ், மாவட்ட மகளிா் அணி துணைச்செயலாளர் சண்முகத்தாய், மாவட்ட பிரதிநிதி விஜயன், தலைமை பேச்சாளா்கள் பொற்கிளி தேவராஜ், ராஜசேகா், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், பகுதி துணைச்செயலாளர் கணேசன், மாநகராட்சி எதிா்கட்சி கொறடா வக்கீல் மந்திரமூா்த்தி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி சேவியா்ராஜ், வட்டச்செயலாளர்கள் அருண்குமாா், வெங்கடஷே், நிா்வாகிகள் முருகேசன், மாாிமுத்து, சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலா் பொன்ராஜ், அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட துணைச்செயலாளர் மகாராஜன், பகுதி செயலாளர் மாாிமுத்து, வட்டச்செயலாளர் விஜயகுமாா், பிஜேபி நிா்வாகிகள் ராம்குமாா், ஆறுமுகம், உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலா் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts