
கந்தர்வகோட்டை ஏப் 16
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது. நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். கணித பட்டதாரி ஆசிரியர் மணிமேகலை அனைவரையும் வரவேற்றார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வ கோட்டை ஒன்றிய தலைவரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும் பொழுது அனைவரும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சிறப்பாக பயின்று ஒன்பதாம் வகுப்பிற்கு அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் சேர இருக்கிறீர்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது போட்டி தேர்வுகளுக்கு தயாராக வேண்டும். எதிர்காலத்தில் ஐஏஎஸ் ,ஐபிஎஸ், உள்ளிட்ட தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள கூடிய வகையில் மாணவர்கள் அனைவரும் பயில வேண்டும். கோடை விடுமுறையில் அனைவரும் நூலகங்களுக்கு சென்று நூலக புத்தகங்களை வாசிக்க வேண்டும். நூலகங்களில் சிறார் கதைகள், நீதி நூல்கள் மற்றும் பெருந்தலைவர்கள் பற்றிய நூல்களைப் படிக்க வேண்டும். இசை, நடனம் மற்றும் ஓவியம் ஆர்வம் இருந்தால் விடுமுறையில் கற்றுக் கொள்ள வேண்டும். தொடர்ந்து தினசரி செய்தித்தாள் களை வாசிக்க வேண்டும். பெற்றோருக்கு எப்பொழுதும் உதவியாக இருக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும் சிறப்பாக கல்வி பயின்று நாட்டிற்கும், நமது மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். எதிர்காலத்தில் அரசு உயர் பதவிகளில் அனைவரும் அமர வேண்டும் அதுவே எங்களுக்கான மகிழ்ச்சியாக இருக்கும் என்று பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் சிந்தியா, நிவின், வெள்ளைச்சாமி, செல்விஜாய், ஜெம்ம ராகினி சகாய கில்டா, கணினி உதவியாளர் தையல்நாயகி உள்ளிட்டோர் எட்டாம் வகுப்பு மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பினார்கள். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அனைவருக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது.
கோடை விடுமுறையில் வெப்பம் அதிகமாக இருப்பதால் வெளிப்புற விளையாட்டுகளின் போது அதிக அளவை தண்ணீர் அருந்துங்கள். சூரிய ஒளி தாக்காமல் இருக்க மாணவர்கள் தொப்பிகளை பயன்படுத்துங்கள். உச்ச சூரிய ஒளி நேரத்தில் வெளியே செல்வதை வெளியில் விளையாடுவதையும் தவிர்க்கவும். மாணவர்களின் வளர்ச்சிக்கு சமச்சீரான உணவு அளிப்பது அவசியம் அதனை உறுதிப்படுத்து விதமாக பாரம்பரிய உணவு வகைகளை தயார் செய்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். கோடை விடுமுறையை சிறப்பாக கொண்டாடுங்கள் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.












