
இக்கூட்டத்தில் பங்கேற்ற தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யாவை ஆதரித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தத் தேர்தல் விசுவாசத்திற்கும் துரோகத்திற்குமான தேர்தல். அதிமுகவில் இருந்து கொண்டு ஆட்சிப் பலனையும், அதிகாரப் பலனையும் அனுபவித்துவிட்டு, கட்சிக்குத் துரோகம் இழைத்து தற்போது திமுகவில் இணைந்துள்ள தற்போதைய எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை மக்கள் வீழ்த்த வேண்டும்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
திமுகவில் இன்று உள்ள பல பேர் அதிமுகவிலிருந்து சென்றவர்கள்தான். அக்கட்சியில் பல ஆண்டுகளாக உழைப்பவர்களை விட, அதிமுகவிலிருந்து சென்றவர்களுக்கே அதிக முக்கியத்துவமும், சீட்டும் வழங்கப்படுகிறது கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதால் மக்கள் பெரும் துயரத்தைச் சந்தித்து வருகின்றனர்.”
இந்த நிகழ்வில், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்: சின்னப்பன், என்.கே. பெருமாள், அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் மகேஷ், ராமச்சந்திரன், பால்ராஜ்; நகரச் செயலாளர் மாரிமுத்து; தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஆனந்த், சுரேஷ்; சண்முகசாமி, ஆசைத்தம்பி, மகளிர் அணி: சாந்தி, பிரியா, பாரதிய ஜனதா கட்சி (பாஜக), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக), தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












