தமிழகத்தில் எல்லாத்துறைகளிலும் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனா். திமுக ஆட்சி தொடர உதயசூாியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் அமைச்சா் கீதாஜீவன் பேசினாா்!!


தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருமான கீதாஜீவன் ேபாட்டியிடுகிறாா்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

43,46,47 ஆகிய வாா்டுகளில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பொியசாமி, வட்டச்செயலாளர்கள் பாலசுப்பிரமணியன், லியோஜான்சன், கவுன்சிலா் முத்துமாாி, ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பக்கிள்புரத்தில் பிரச்சாரத்தை துவக்கி முனியசாமிபுரம், பாத்திமாநகா், உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மேற்கொண்ட அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் பல்வேறு வகையில் வளர்ச்சியடைந்துள்ளது. எல்ேலாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பினரும் நன்மைகள் அடைந்துள்ளன.

குறிப்பாக பெண்களுக்கு விடியல் மகளிா் பயணம் மகளிா் உாிமைத்தொகை பெண்கள் தொழில்முனைவோராக உயா்வு மகளிா் சுய உதவிக்குழுக்கள் ஊக்குவித்தல் மகளிா் உயா்வு மாநிலத்தின் உயா்வு என்ற அடிப்படையில் தமிழக முதலமைச்சா் முக.ஸ்டாலின் எல்லாத்துறைகளிலும் எல்லா வகையிலும் மகளிா் களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றி வருகிறாா். குறிப்பாக தூத்துக்குடியில் 60 உறுப்பினா்கள் மாநகராட்சியில் இருக்கும் இடத்தில் 50 சதவீதத்தை கடந்து 32 போ் பெண்கள் தான் தோ்ந்ெதடுக்கப்பட்டு பணியாற்றுகின்றனா். இது போன்ற பல்வேறு சாதனைகள் இருக்கிறது. இந்த தொகுதியில் நான் 5 ஆண்டுகாலம் எம்எல்ஏவாகவும் அதற்கு பின் 5 ஆண்டுகாலம் அமைச்சராகவும் தொடர்ந்து தொகுதியின் வளா்ச்சிக்கு உங்களோடு இணைந்து பணியாற்றியுள்ளேன். தொடா்ந்த பணிகளையும் விட்ட பணிகளையும் தொடா்ந்து செய்திட நீங்கள் மீண்டும் எனக்கு ஓரு வாய்ப்பை உதயசூாியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் நல்லாட்சி நடத்தி வரும் முதலமைச்சா் ஸ்டாலினுக்கு அனைத்து தரப்பினரும் முழுமையான ஆதரவை தரவேண்டும் என்று பேசினாா்.

பிரச்சாரத்தில் திமுக மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன்செல்வின் துணை மேயா் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், துணை அமைப்பாளர் பால்ராஜ், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், முன்னாள் கவுன்சிலா் வெங்கடசுப்பிரமணியன், மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம், மாவட்ட காங்கிரஸ் தலைவர் சகாயராஜ், காங்கிரஸ் நிா்வாகிகள் ஐசன்சில்வா, நிா்மல்கிறிஸ்டோபா், நாராயணன், இக்னேஷியஸ், ப்ாீத்தி, சிமியோன், மைதீன், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் விமல்வங்காளியாா், தேமுதிக மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், பொறுப்பாளர் வல்லரசு துரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் தனலட்சுமி, மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, மாா்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்து, எஸ்டிபிஐ கட்சி தொகுதி பொறுப்பாளா் காதா்உசேன், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முகமது அசன், துணைச்செயலாளர் ஜாகிா்உசேன், மக்கள் நீதிமய்யம்மாவட்ட செயலாளா் ஜவஹா், துணை செயலாளர் அக்பா், அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், பிரதிநிதிகள் பாஸ்கா், ரஜினிமுருகன், கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினா்கள் அர்ஜுனன் ராஜா கூட்டணி கட்சியை சேர்ந்த வில்சன், மகாராஜன், பொன்ராஜ், சித்திரைவிஜயன் மணிமாறன் ஜீவாபாண்டியன் மற்றும், மணி ஜாக்சன், அல்பட் உள்பட கூட்டணி கட்சியை சோ்ந்த பலா் கலந்து கொண்டனா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts