
திமுக வெற்றிக்காகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று விளாத்திகுளத்தில் நடைபெற்ற தேர்தல் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன் வலியுறுத்தினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் மார்கண்டேயனை ஆதரித்து, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான கீதா ஜீவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
தேர்தல் களப்பணிகளை முடுக்கிவிடும் நோக்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கூட்டணி கட்சிகளின் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர். குறிப்பாக திமுக தரப்பில் தொகுதி தேர்தல் பார்வையாளர் பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, சின்னமாரிமுத்து, அன்புராஜன், இமானுவேல், ராதாகிருஷ்ணன், செல்வராஜ், மும்மூர்த்தி, நவநீதகண்ணன், காசிவிஸ்வநாதன் மற்றும் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி.
காங்கிரஸ் தெற்கு மாவட்டச் செயலாளர் பெருமாள்சாமி, பெத்துராஜ், ஞானராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் கரும்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் புவிராஜ், தாலுகா செயலாளர் ஜோதி மதிமுக ஒன்றிய செயலாளர் மணிராஜ், விசிக மாவட்ட செயலாளர் சடையாண்டி, தேமுதிக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சுகப்பிரியா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அஸ்மத் உள்ளிட்டோர் கல்நது கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய கீதா ஜீவன், வேட்பாளர் மார்கண்டேயனின் வெற்றிக்காகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் பேரூராட்சி மன்றத் தலைவர்கள் சூர்யா அயன்ராஜ், ராமலட்சுமி சங்கரநாராயணன், வனிதா அழகுராஜ் மற்றும் முக்குலத்தோர் புலிப்படை, ஆதித்தமிழர் கட்சி, திராவிட தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












