தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யா இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார்!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சத்யா போட்டியிடுகிறார்ள் நேற்று அதிகாலையில் விளாத்திகுளம் சாலையும் தெரு பேருந்து நிலையம் காய்கறி மார்க்கெட் மதுரை ரோடு அம்பாள் நகர் சன்னதி தெரு மெயின் பஜார் தாலுகா ஆபீஸ் ரோடு பத்திரகாளி அம்மன் கோவில் தெரு போலீஸ் லயன் ராம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் நடந்தே சென்று வியாபாரிகள் பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார் பொதுமக்கள் ஆளு உயர மாலை அணிவித்து சால்வை அணிவித்து வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனைத் தொடர்ந்து நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரம் என்பதால் விறுவிறுப்பாக நடைபெற்றது இதில் வேட்பாளர் சத்யா பேசுகையில் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் ஆசியுடன் இதய தெய்வம் புரட்சித்தலைவர் அம்மா ஆசியுடன் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆதரவுடன் உங்களில் ஒருத்தி ஆகவும் உங்கள் வீட்டுப் பெண்ணாகவும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வந்துள்ளேன் அதிமுக ஆட்சி அமைந்த உடன் விளாத்திகுளம் தொகுதியில் தொழிற்சாலை அமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் பொறியியல் கல்லூரி அமைக்க பாடுபடுவேன் வீடு இல்லாத பொதுமக்களுக்கு அம்மா இல்லம் திட்டம் மூலம் வீடுகள் அனைவருக்கும் கட்டி கொடுக்க பாடுபடுவேன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இலவச பேருந்து பயணத்திட்டம் சிறு வியாபாரிகள் கூற்றவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் தமிழகத்தில் போதை பழக்கத்தால் தினமும் பெண்கள் பாதுகாப்பு இல்லாமல் சூழ்நிலை உருவாகியுள்ளது சட்டம் ஒழுங்கு பிரச்சனை சரி செய்ய இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உதவித்தொகை எடப்பாடியார் ஆட்சி அமைந்த உடன் 10000 வழங்கப்படும் குலவிளக்கு திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு 2000 வழங்கப்படும் மாதந்தோறும் பெண்களுக்கு இலவச பஸ் வசதியும் செய்து தரப்படும் அதிமுக ஆட்சி வந்த உடன் பெண் குழந்தைகள் வைப்பு நிதி மீண்டும் வாங்கி கணக்கில் செலுத்தப்படும் பெண்களுக்கான இருசக்கர வாகனத்திற்கு 25000 மானியம் வழங்கப்படும் 100 நாட்கள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தி வழங்கப்படும் காற்றுப் பண்டிகள் கட்டுப்பாட்டை வன காவலர்கள் நியமித்து அதன் மூலம் கட்டுப்படுத்தப்படும் இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் பகுதிகளுக்கு முன்னேற்ற பாதையில் என்ற தலைப்பில் அ.தி.மு.க. வேட்பாளர் சத்யா
அறிவிப்பு

விளாத்திகுளம் வளர்ச்சிக்கான 13 அம்ச செயல்திட்டம்

விளாத்திகுளத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்கவும், நவீன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும்
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த செயல்திட்டம் அறிவிக்கப்படுகிறது.

15 வார்டு மக்களுக்கும் R.O. குடிநீர் வசதி
15 வார்டுகளுக்கும் தரமான சாலை வசதி
நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனை மேம்பாடு
பொது மயானம் மின் மயமாக்கல்
கண்மாய் உபரி நீருக்கு தடுப்புச் சுவர்
வைப்பாற்றில் கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டம்
15 வார்டு மக்களுக்கும் வடிகால் வசதி
படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு
அரசு மருத்துவமனையில் 24 மணி நேர மருத்துவ சேவை
பேருந்து நிலையம் நவீன மயமாக்கல்
வேம்பார் ரோடு & துளசிபட்டி பகுதியில் பயணிகள் நிழற்குடை
விவசாய நிலங்களுக்கு பாசன வசதி
பட்டா கிடைக்காத பயனாளிகளுக்கு உடனடி பட்டா வழங்கல்
விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் குரலாக சட்டமன்றத்தில் ஒலிக்க R. சத்யா அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து
பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள் என்று பேசினார்கள் உடன் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் இன்றைய செயலாளர்கள் மகேஷ்.பால்ராஜ். ராமச்சந்திரன். போடுசாமி நகரச் செயலாளர் மாரிமுத்து மற்றும் வார்டு மெம்பர் பிரியா மகளிர் அணி சாந்தி கூட்டணி கட்சியினர் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சரவணன் கிருஷ்ணன் ஒன்றிய செயலாளர் காட்டுராஜா காளியப்பன் . கந்தசாமி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மகளிர் அணி மாநில துணைத்தலைவி செல்வி முத்து கணேஷ் ஒன்றிய செயலாளர் வடிவேல் முருகன் முத்துராமலிங்கம் தொண்டர்கள் பொறுப்பாளர்கள் என ஆர்வமாக ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts