
அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் தூத்துக்குடியில் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுவிடம் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் ஏசா துரை தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ண பாண்டியன் மற்றும் பாமக டாக்டர் ராமதாஸ் அணியைச் சேர்ந்த அயன் சின்னத்துரை அகில இந்திய பார்வர்டு பிளாக் மாவட்ட தலைவர் ரமேஷ், மாவட்ட தொழிற்சங்கம் முத்துராஜ், பாமக மாநகர செயலாளர்முத்து குமார், கருங்குளம் ஒன்றிய செயலாளர் கிட்டு தேவர், மாநகர இளைஞரணி செயலாளர் சரவணன் உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
-பரணி பாலா.












