பாரம்பரிய கைவினைப் பொருள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது!!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பா. பிரியங்கா பங்கஜம், இ.ஆ.ப., அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் மாதந்தோறும் மூன்றாவது சனிக்கிழமை பாரம்பரிய கைவினைப் பொருள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதன் தொடர்ச்சியாக, இன்று தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு (GI) பெற்ற கைவினைப் பொருட்களில் ஒன்றான ‘தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடுகள்’ குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சியை நெட்டி வேலைப்பாட்டு கலைஞர் திருமதி எழில்விழி ராதா அவர்கள் வழங்கினார்.

தஞ்சாவூர் நெட்டி வேலை என்பது, குளங்களில் வளரும் ‘அஸ்பெரா’ எனப்படும் நீர்வாழ் தாவரத்தின் வெள்ளை நிற தண்டுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் நுணுக்கமான கைவினைக் கலை ஆகும். நெட்டித் தண்டின் தோலை நீக்கி, அதன் உட்புற மென்மையான வெள்ளைப்பகுதியைக் கொண்டு கலைப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. கத்தியால் செதுக்கப்படும் இக்கலைப்பொருட்கள் எளிதான எடை மற்றும் மென்மையான தன்மை கொண்டவை.

தஞ்சாவூர் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்தவும், உள்ளூர் கைவினைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், இப்பாரம்பரிய கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும், பொதுமக்களுக்கு நேரடி பயிற்சி வழங்கப்படுகிறது.

மேலும், இம்முகாமில் எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு 100% வாக்கு சதவீதத்தை வலியுறுத்தும் வகையில் நெட்டி வேலைப்பாட்டின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கோட்டாட்சியர் செல்வி நித்தியா, சமூக பாதுகாப்பு திட்ட துணை ஆட்சியர் திருமதி சௌமியா, சுற்றுலா அலுவலர் திரு வரதராஜன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பாலமுருகன் தஞ்சாவூர்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts