
கோயம்புத்தூர் மலுமிச்சம்பட்டி பஞ்சாயத்தை சார்ந்த பைந்தமிழ் நகர் ஏரியாவில் அந்தப் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குடிநீர் விநியோகத்திற்காக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளது. அதன் அடியில் அரசு சார்பில் ஆழ்குழாய் போர்வெல் அமைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் பொது மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் அத்திமீறி ஒருவர் ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் விற்று வருவதாக தெரிகிறது.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் S. ராஜா அவர்கள் கூறுகையில்:-
மலுமிச்சம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பைந்தமிழ் நகர் பகுதியில் மேல்நிலைத் தொட்டி அருகிலேயே குடியிருக்கும் ஒரு நபர் தனது வீட்டு தேவைக்காக ஆழ்குழாய் அமைத்ததாக கூறிக்கொண்டு ஒரு நாளைக்கு சுமார் 20 டேங்கர்களில் தனது ஆழ்குழாய் கிணற்றின் மூலம் நீர் பிடித்து வணிகப் பயன்பாட்டிற்காக விற்று வருகின்றார். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


வீட்டு குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறு தோண்டுவதாக கூறி தற்போது அந்த நபர் தண்ணீரை விற்று வணிகப் பயன்பாட்டிற்காக பயன்படுத்து வருவதால் அதைச் சுற்றியுள்ள வீடுகளில் ஆழ்துளை கிணற்றில் நீர் ஆதாரம் பாதிக்கப்படு வருவதாக, மேலும் அரசு அமைத்துள்ள ஆழ்துளை கிணற்றிலும் நீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு சரிவர குடிநீர் வினியோகம் வழங்க இயலவில்லை எனவும், இந்த முறையற்ற தனியார் குடிநீர் வினியோகத்தை தடுக்க வேண்டும் என்றும் அரசு அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தலைமை நிருபர்,
-ஈசா.












