ரேஷன் கடை மது குடிக்கும் கூடாரமாக மாறும் அவலம் அச்சத்தில் பொதுமக்கள்..!!

கோயம்புத்தூர் வெள்ளலூர் பஞ்சாயத்து உட்பட்ட கிருஷ்ணா நகர் எனும் பகுதியில் புதிதாக ரேஷன் கடை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாததால் மாலை நேரங்களில் மது அருந்துவோர் மற்றும் இளைஞர்கள் குடித்துவிட்டு பொழுதுபோக்கும் இடமாக மாறி உள்ளதாக அங்குள்ள மக்கள் அச்சத்தோடு தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் அவர்கள் குடித்துவிட்டு அவர்கள் உபயோகிக்கும் பாட்டில்கள் டம்லர்கல் மற்றும் தின்பண்டங்கள் மற்றும் பிளாஸ்டிக் பேப்பர்கள் அனைத்தையும் இங்கேயே போட்டுவிட்டு செல்வது அருவருக்கத் தக்க வகையில் இருக்கின்றன.

கிருஷ்ணா நகர் பொதுமக்கள் சிலரிடமிருந்து நமக்கு வந்த தகவலின் அடிப்படையில் நமது நாளைய வரலாறு பத்திரிக்கையின் சார்பாக குழு சென்று பார்த்தபோது அவர்கள் சொன்னபடியே தான் காட்சிகள் இருந்தது. இது பற்றி மேலும் சிலரிடம் விசாரித்த போது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே அருகிலேயே கிருஷ்ணன் கோவில் அருகில் வேறு ஒரு ரேஷன் கடை இருந்தும் இந்த கடையை திறந்து இருப்பதாகவும் கூறுகின்றனர் இதற்கு பதிலாக சமுதாயக்கூடம் போன்றவை அமைத்து தந்திருந்தாலும் தங்கள் பகுதிக்கு பேரு உதவியாக இருந்திருக்கும் எனவும் அங்கு வசிக்கும் பொதுமக்கள் தாங்கள் குடும்பத்தில் சிறு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றாலும் குறைந்தது நான்கு கிலோமீட்டர் செல்ல வேண்டிய நிலை உள்ளது எனவும் கூறுகின்றனர் அதற்கு பதிலாக சமுதாயக்கூடம் இருந்தால் பேரு உதவியாக இருந்திருக்கும் என்றும் அதை விடுத்து ரேஷன் கடை கட்டி நடைமுறைக்கு கொண்டு வராமல் குடிமகன்களால் அந்த இடம் சீரழிந்து கொண்டிருக்கின்றது என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்கள்.

நாம் சென்று ஆய்வு செய்த போது பொதுமக்கள் கூறியது உண்மை என்றும் அதற்கு சாட்சியாக ரேஷன் கடை வளாகத்தில் மது பாட்டில்களும் குடிக்க பயன்படுத்த டம்லர்கலும் மற்றும் மது பாட்டில்கள் உடைந்த துகள்களும் நிறைந்து காணப்பட்டது.

பொதுமக்கள் மாலை நேரங்களில் அந்தப் பகுதியின் நடப்பதற்கு அச்சப்படும்
சூழ்நிலையை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts