
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் மதுரை வடக்குத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து ஜனநாயகத்தைப் படுகொலை செய்யும் ஊழல் அரசியல்வாதிகள் ரத்த வாந்தி எடுத்துத் தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என அவர் மதுரை தத்தனேரி மயானக் காளியிடம் வினோத வழிபாடு நடத்தினார். நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ அவர் காளி கோயிலுக்குச் சென்றபோது அங்கிருந்த போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசாரின் அனுமதியுடன் மயானக் காளி கோயிலில் விளக்கேற்றி தனது வேண்டுதலைக் கூறி சிறப்புப் பூஜை செய்து வழிபட்டார். தேர்தல் முறைகேடுகளைச் செய்பவர்களுக்குக் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே அவரது வேண்டுதலின் பின்னணியில் உள்ள ஆதங்கம் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் நேர்மை இருக்க வேண்டும் பணநாயகம் ஒழிய வேண்டும் என்ற சிந்தனையோடு.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
–𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.












