​வால்பாறை தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் குட்டி (எ) சுதாகருக்கு ஆதரவு மலைவாழ் மக்கள் உறுதி

வால்பாறை சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் குட்டி (எ) சுதாகரை ஆதரித்து மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வெல்லிமுடி, மரபாலம், காடம்பாறை மற்றும் கீழ்பூனாச்சி உள்ளிட்ட மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமங்களுக்கு நேரில் சென்ற கூட்டணி கட்சி நிர்வாகிகள் வால்பாறையைச் சேர்ந்த நமது வேட்பாளர் குட்டி (எ) சுதாகருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அவர் வெற்றி பெற்றால் இப்பகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.

இந்த வாக்கு சேகரிப்பில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பி. பரமசிவம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் எஸ். மோகன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நன்றியும் கோரிக்கையும்
தங்களுக்குத் தேவையான குடியிருப்பு வசதி மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகளைச் செய்து கொடுத்த தமிழக முதல்வருக்கு மலைவாழ் மக்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தனர். அதே வேளையில் இன்னும் அடிப்படை வசதிகள் எட்டாத பிற மலைவாழ் கிராமங்களுக்கும் முன்னுரிமை அளித்து வசதிகளை மேம்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று வேட்பாளரிடமும் கூட்டணி நிர்வாகிகளிடமும் கோரிக்கை வைத்தனர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை செயலாளர் பி. பரமசிவம் கூறுகையில் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது எங்கள் கடமை. சாலை, மின்சாரம் மற்றும் குடியிருப்பு வசதிகள் இல்லாத கிராமங்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

நிர்வாகிகளின் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட மலைவாழ் மக்கள் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் திரு. சுதாகருக்குத் தங்களது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts