வெகு விமர்சியாக நடைபெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் திரளான மக்கள் சாமி தரிசனம்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சித்திரைத் திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சியாக நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டபபடியான பூஜைகள் நடைபெற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணமாம் ஸ்ரீ மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் சர்வ அலங்காரங்களுடன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த மண்டபத்தில் எழுந்தருளினார்.

அங்கு சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து வேத மந்திரங்கள் பாடி மாலைகளை மாற்றிக்கொண்ட பின்னர் சுந்தரேஸ்வரர் சாமியிடம் இருந்து பெற்ற திருமாங்கல்யத்தை மீனாட்சி அம்மனுக்கு அணிவித்தனர். அதே நேரத்தில் கோவிலில் திரண்டு இருந்த ஏராளமான பெண்கள் தங்களது திருமாங்கல்யத்தை மாற்றிக் கொண்டனர்.

பின்னர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு தீபாரணை நடைபெற்றது. நிகழ்வில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திருக்கல்யாண வைபவத்தை கண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 10 வது திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரர் திரு தேரோட்டம் மற்றும் பொன்னூஞ்சல் வைபவம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts