​கூகுள் பே பாக்கெட் மணி அம்சம் பரவும் வதந்திகளும் – உண்மையான பின்னணியும்

கோவை
வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் பகிரப்படும் ஒரு செய்தியில் கூகுள் பே செயலியில் கை கோர்ப்பது போன்ற ஒரு ஐகான் (Pocket Money) வந்துள்ளது. அதைத் தெரியாமல் கூட கிளிக் செய்துவிடாதீர்கள். அப்படிச் செய்தால் உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டு வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதும் திருடப்பட்டுவிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கூகுள் பே நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த வசதியின் உண்மையான பெயர் UPI Circle இது இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகத்தால் (NPCI) அங்கீகரிக்கப்பட்ட ஒரு அதிகாரப்பூர்வமான சேவையாகும்.

வங்கிக் கணக்கு இல்லாத பிள்ளைகள் அல்லது முதியவர்கள் தங்கள் குடும்பத் தலைவரின் வங்கிக் கணக்கைப் பயன்படுத்திப் பணப் பரிமாற்றம் செய்ய இந்த வசதி வழிவகை செய்கிறது.

இந்தப் பட்டனை அழுத்துவதால் மட்டும் பணம் திருடப்படாது. பயனரே முன்வந்து ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து, அவருக்குப் பணம் செலவு செய்ய அனுமதி அளித்தால் மட்டுமே பரிமாற்றம் நடைபெறும்.

இதில் முழு அனுமதி (Full Delegation) அல்லது ஒவ்வொரு முறைக்கும் அனுமதி (Pay on Request) என இரண்டு விருப்பங்கள் உள்ளன. இதன் மூலம் உங்கள் அனுமதியின்றி ஒரு பைசா கூட உங்கள் கணக்கிலிருந்து போகாது என்பது குறிப்பிடத்தக்கது.

வதந்திகளைப் பரப்பாதே உண்மையை உரக்கச் சொல் என்ற சிந்தனையோடு

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts