அதிமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெல்லும் : கடம்பூர் செ. ராஜு நம்பிக்கை!

அதிமுக கூட்டணி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளருமான கடம்பூர் செ. ராஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4, திங்கள்கிழமை) நடைபெற உள்ள நிலையில், கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் தொகுதி அதிமுக வாக்கு எண்ணும் மைய முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கடம்பூர் செ. ராஜு, முகவர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும். அதிமுக மட்டுமே தனியாக 140 முதல் 170 தொகுதிகள் வரை வெல்லும் வாய்ப்பு உள்ளது. அதிமுக கூட்டணியில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து பணியாற்றினோம். ஆனால், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தாமதமாகவே இணைந்ததால், அவர்களுக்குள் ஒருமித்த கருத்து இல்லை. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்குப் பின்னர் அரசியலுக்கு வந்த நடிகர்கள் யாராலும் வெற்றி பெற முடியவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து நாளை தெரியவரும். கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் தொகுதியில்  அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். எனவும் எஸ்.ஐ.ஆர் திட்டத்தை அரசியலாக்கி எதிர்த்தவர்கள் தற்போது யதார்த்த நிலையைப் புரிந்து கொள்வார்கள் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் சத்யா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என். கே. பெருமாள்.  சின்னப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பூங்கோதை நடராஜன் மாவட்ட செய்தியாளர் 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts