
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வெயிலின் தாக்கம் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைகளை ஏற்று பள்ளித் திறப்பு தற்போது ஜூன் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன்படி 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 4 அன்று பள்ளிகள் திறக்கப்படும். அன்றைய தினமே மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் சீருடைகளை தங்கு தடையின்றி வழங்க தயாராக இருக்குமாறு அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.












