
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்று அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியத்திற்குட்பட்ட திவான்சாபுதூர் ஊராட்சி பூச்சனாரி பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த வெற்றியைக் கோலாகலமாகக் கொண்டாடினர். இன்று காலை முதலே பட்டாசுகள் வெடித்தும் மேள தாளங்கள் முழங்கவும் அப்பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது பூச்சனாரி பகுதி
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தவெக நிர்வாகிகள் பூச்சனாரி பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள எங்களது தலைவர் விஜய்யின் ஆட்சியில் மக்கள் நலம் பெறுவார்கள் எனத் தொண்டர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பூச்சனாரி பகுதியைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழக துணை தலைமை நிருபர்-
உங்கள் 𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்












