
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் வேடப்பட்டி கிராமம் கல்வியில் வழிகாட்டி தெய்வத்திரு ஐயா செல்லச்சாமி நாடார் அவர்களின் நினைவாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் மற்றும் அறம் செய் அறக்கட்டளை விளாத்திகுளம் இவர்களின் உதவியுடனும் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் மருத்துவ முகாம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் (10.5.26) நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த முகாமில் கண்புரை உள்ள நோயாளிகள் மற்றும் கண் சம்பந்தமான பரிசோதனை நடைபெற்றது இதில் 78 நபர்கள் கலந்து கொண்டு கன்புறை உள்ள நோயாளிகள் ஆப்ரேஷன் செய்ய 18 நபரை தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் அங்கு அவர்களுக்கு லென்ஸ் பொருந்தி நவீன முறை மருந்து தங்குமிடம் உணவு மற்றும் போக்குவரத்து அனைத்தையும் இலவசமாக அறுவை சிகிச்சை செய்வதற்கும் ஒரு மாதம் கழித்து பரிசோதனை இலவசமாக மறுபரிசோதனை செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது இந்த முகாமை புள்ளியல் துறை உதவி இயக்குனர் ஓய்வு இரத்தினம் அவர்கள் துவங்கி வைத்தனர் தலைமை பாரதி அவர்கள் முன்னிலை வேல்முருகன் அவர்கள் மாநில பொதுச் செயலாளர் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் செந்தாமரை மகளிர் அணி மாநில துணைச் செயலாளர் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் நன்றி செ.கற்குவேல் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட தலைவர் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம்.
இந்த முகாம் ஏற்பாடு இளையராஜா மாரியப்பன் அறம் செய்ய அறக்கட்டளை விளாத்திகுளம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












